Tuesday, October 11, 2011

குறுதி கொட்டும் செம்மொழி

குறுதி கொட்டும் செம்மொழி
இன்குலாப்


நினைவுப் படலத்தில்
குறுதிக் கொடுகளாய்ப் பதிந்த
கொடிய நாட்கள் அவை.

வானம் மறுக்கப்பட்ட பறவைகளை
நான்கு திசைகளிலிருந்து
நச்சு அம்புகள் துரத்திய நாட்கள்.

கலைக்கப்பட்ட கூடுகளிலிருந்து
அடைகாக்கப்பட்ட முட்டைகள்
உடைந்து சிதற,
மண்ணெல்லாம்
உதிரக் கொடிகள் படர்ந்த நாட்கள்.

பறவைகளின் நெஞ்Œப் படபடப்பில்
காற்றும் நெளிந்து
கூகூவெனக் கூக்குரலிட்ட நாட்கள்.

வேடுவனின் இறையாண்மையில்
குறுக்கிட முடியாதென்று,
நாக்கைச் சப்புக் கொட்டிப்
பறவைகளின் பச்சைக்கறி விற்கக்
கடைதிறந்த
சந்தை வணிகர்களின்
பங்கு நாட்கள்...

கிளிகளுக்கு இரங்குவதாய்
அமுத பூனை
ஒரு சிட்டுக்குருவியின்
சிறகுரிக்கும் நேரம்
உண்ணாதிருத்தம்
மாபெரும் போராட்ட நாட்கள்
அறைகூவல்களாலும்
ஆரவாரங்களாலும்
பொருள் தொலைந்து,
பழங்காட்சியகத்தில்
பாராட்டப்படும் ஒலிக்கூடுகளில்
எதில்
இந்த நினைவைப் பதிவேன்?

இந்த நினைவுகள்
விடை வேண்டும் கேள்விகள்.

தன்னை வைத்து விளையாடும்
வித்தகர்களின்
சதுரங்கப் பலகையிலிருந்தும்,

விரைந்து விற்றுக் கொண்ட
கலாநிதிகளின்
ஆ#வாழங்களிலிருந்தும்,

அதிகாரத்தின் கடைக்கண் பார்வைக்கு
அடிபெயர்ந்த நெடுமரமாய்ச்
சோர்ந்து கிடக்கின்ற
கவிஞர் பெருமக்களின்
பேனா முனைகளிலிருந்தும்,

விலகி,
வெகுதொலைவில்
முள்ளிவாய்க்கால் கரையில்
அலைந்து கொண்டிருக்கிறது
என் உண்மையான தாய்மொழி
குறுதி கொட்டும்
செம்மொதுழியாய்..

Monday, March 14, 2011

முள்ளிவாய்க்கால் கரையில் அலைந்து கொண்டிருக்கிறது என் தாய்மொழி

முள்ளிவாய்க்கால் கரையில் அலைந்து கொண்டிருக்கிறது என் தாய்மொழி

கவிஞர் இன்குலாப்


நினைவுப் படலத்தில்
குருதிக் கோடுகளாய்ப் படர்ந்த
கொடிய நாட்கள் அவை

வானம் மறுக்கப்பட்ட
பறவைகளை
நான்கு திசைகளிலிருந்தும்
நச்சு அம்புகள் துரத்திய நாட்கள்

கலைக்கப்பட்ட கூடுகளிலிருந்து
அடைகாக்கப்பட்ட முட்டைகள்
உடைந்து சிதற,
மண்ணெல்லாம்
உதிரக்கொடி படர்ந்த நாட்கள்

பறவைகளின் நெஞ்சப்படபடப்பில்
காற்றும் நெளிந்து
கூகூவெனக் கூக்குரலிட்ட நாட்கள்

வேடுவனின் இறையாண்மையில்
குறுக்கிடமுடியாதென்று
நாக்கைச் சப்புக்கொட்டி
பறவைகளின் பச்சைக் கறிவிற்கக்
கடைதிறந்த
சந்தை வணிகர்களின்
பங்கு நாட்கள்.

கிளிகளுக்கு இரங்குவதாய்
அழுத பூனையொன்று
ஒரு சிட்டுக்குருவியின்
சிறகுரிக்கும் நேரமே
உண்ணாதிருந்த
மாபெரும் போராட்ட நாட்கள்
விட்டுவிடுதலையானவை
சிட்டுக்குருவிகள் என்று
கொண்டாடுவேனோ
இனியும் இங்கே?

ஒரு சிறகில் சுதந்திரமும்
மறு சிறகில் துயரமுமாய்
அலைகின்றனவோ
அனைத்துப் பறவைகளும்?

எத்தனை கூட்டமாய்
எவ்வளவு தூரமாய்
எந்த உயரத்தில் பறந்தாலும்
கடந்த வெளிகளில்
அவற்றின்
சிதைந்த சிறகுகளின்றி
இல்லை
சின்னதொரு தடமும்
என்று நிமிரும் முகத்தில்
கரும்புள்ளியாய்க்கடப்பது
எதன் நிழல்?

கூடும் குஞ்சும்
கொள்ளைபோனபின்பும்
வீழாதமட்டும்
ஓய்வறிவதில்லை
எந்த ஒரு சிறகும்!

உயரமோ தாழ்வோ
துல்லியம் தப்பாத தொலைவோ
மகிழ்ச்சி, காதல்,
அச்சம், துணிச்சல்
சுதந்திரம்,
ஆறாத்துயரம்
இவற்றுடன்
போராட்ட ஞானத்தையும்
போதிக்கின்றனவோ
அசையும் சிறகுகள்
தம்
மௌன மொழிகளில்!;

- – - – -

அறைகூவல்களாலும்
ஆரவாரங்களாலும்
பொருள் தொலைந்து
பழங்காட்சியகத்தில்
பாராட்டப்படும்
ஒலிக்கூடுகளில்
எதில்
இந்த நினைவைப் பதிவேன்?

இவை
விடை வேண்டும் கேள்விகள்

தன்னை வைத்து விளையாடும்
வித்தகர்களின்
சதுரங்கப்பலகையிலிருந்தும்

விரைந்து விற்றுக்கொண்ட
கலாநிதிகளின்
ஆய்வாழங்களிலிருந்தும்

அதிகாரத்தின் கடைக்கண் பார்வைக்கு
அடிபெயர்ந்த நெடுமரமாய்ச்
சாய்ந்து கிடக்கின்ற
கவிஞர் பெருமக்களின்
பேனா முனைகளிலிருந்தும்

விலகி,
வெகு தொலைவில்
முள்ளிவாய்க்கால் கரையில்
அலைந்து கொண்டிருக்கிறது
என் உண்மையான தாய்மொழி
குருதி கொட்டும்
செம்மொழியாய்….

- கவிஞர் இன்குலாப்

கலகப்பாடலை உழைக்கும் மக்களுக்கு தந்தவர் மக்கள் கவிஞர் இன்குலாப்.

கலகப்பாடலை உழைக்கும் மக்களுக்கு தந்தவர் மக்கள் கவிஞர் இன்குலாப்.

இன்குலாப் இன்குலாப் என்றால் புரட்சி என்று பொருள். புரட்சிகர சிந்தனையை வாழ்க்கையாகவே வரித்துக்கொண்ட இவர், பெயரையே இன்குலாப் எனப் புனைந்து கொண்டார். இயற்பெயர் சாகுல் அமீது. ராமநாதபுரம், கீழக்கரையில் இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர். பிறந்த குடும்பத்தி லிருந்தே பாட்டுக்கட்டும் திறனையும், எதிர்ப்புக் குரலையும் ஈர்த்துக் கொண்ட இவரின் முதல் கவிதை முயற்சி 12 வயதில் நிகழ்ந்தது.
தர்க்காவில் 'பேய் ஓட்டுகிறேன்' என்று பெண்களைக் குச்சியால் அடித்துத் துன்புறுத்தியதைக் கண்டு பொறுக்க முடியாத கணத்தில் முதல் கவிதை கனன்று வெளிப்பட்டது. அது முதல் இன்றுவரை தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்.
சாதி, மதம், இனம், மொழி, வர்க்கம் என சகல தளங்களிலும் நிகழும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக இவரது குரல் உரத்து ஒலிக்கிறது.
இவரது கவிதைகள் 'ஒவ்வொரு புல்லாய்' எனும் தொகுதியாகவும், கட்டுரைகள் 'ஆனால்' எனும் நூலாகவும், நாடகங்கள் 'குறிஞ்சிப்பாட்டு', 'குரல்கள்' எனும் தொகுதி களாகவும், கதைகளும் குறுநாவலும் 'பாலையில் ஒரு சுனை' எனும் நூலாகவும் வெளிவந்துள்ளன. 'பொன்னிக்குருவி' 'புலி நகச் சுவடுகள்' எனும் கவிதை நூல்களும், 'மணிமேகலை' நாடக நூலும் தயாராகி வருகின்றன.
இவரது எழுத்துகளுக்காகக் கிடைத்தது விருதுகளோ பரிசுகளோ அல்ல; அச்சுறுத்தல்களும், நள்ளிரவுக் கைதுகளும் தான். இவரும் தனது படைப்புகளுக்காக எதிர்பார்த்திருப்பது விருது களையோ, பரிசுகளையோ அல்ல; சமூக மாற்றத்தைத்தான்.

ஈழத் தமிழர் படுகொலையைத் தடுக்கத் தவறிய தமிழக அரசைக் கண்டித்து அது தனக்கு அளித்த கலைமாமணி விருதை கவிஞர் இன்குலாப் திருப்பி அனுப்பி விட்டார்.

கடந்த 2006ம் ஆண்டு இன்குலாப்புக்கு கலைமாமணி விருது அளிக்கப்பட்டது.

இந்த விருதை தற்போது தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பி விட்டார் இன்குலாப். இதுகுறித்து அவர் அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

எனக்கு அளிக்கப்பட்ட 'கலைமாமணி' விருதைப் பின்வரும் காரணங்களால் திருப்பி அனுப்புகின்றேன்.

தமிழீழத்தில் நடைபெறும் தமிழினப் படுகொலைக்கு எதிரான தமிழக மக்களின் போராட்டத்தில் முத்துக்குமார் உள்ளிட்ட இளைஞர்கள் உயிர்த்தியாகம் செய்வது தொடர்கிறது. உண்மையான மக்கள் அரசு இங்கு இருக்குமேயானால், இவற்றால் துணுக்குற்றுத் தமிழினத்துக்கு நியாயம் செய்திருக்கும்.

ஆனால் தமிழின ஒழிப்பை முன்னின்று நடத்தும் சிங்களப் பேரினவாத அரசுக்கு, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு இன்றும் வஞ்சகமாக உதவிக் கொண்டிருக்கின்றது.

வன்முறையில் நம்பிக்கை அற்றதாகப் பீற்றிக்கொள்ளும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள், தமிழக இளைஞர்கள் மேற்கொண்ட உயிர்த்தியாக அகிம்சைப் போராட்டத்தைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை.

அகிம்சைப் போராட்டங்களைப் பொருட்படுத்தாத வல்லாதிக்க மரபு காங்கிரசுடையது. தமிழ் நாடு என்ற பெயர் சூட்டக் கோரிய தியாகி சங்கரலிங்கனார் உண்ணாநோன்பிருந்து உயிர்துறந்தது காங்கிரஸ் ஆட்சியின் போதுதான்.

1965 இல், இந்தி ஆதிக்கத்துக்கு எதிராக உணர்வுகொண்ட தமிழர்கள் தீக்குளித்து உயிர்துறந்தபோதும், துப்பாக்கிச் சூடு நடத்தி இரத்தவெறி தீர்த்துக் கொண்டது காங்கிரஸ் ஆட்சிதான்.

இந்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி திலீபன் யாழ். மண்ணில் உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த போதும் பொருட்படுத்தாது, ஈழத் தமிழர்களை ஆயிரக் கணக்கில் கொன்று குவித்ததும், தமிழ்ப் பெண்களை வல்லாங்கு செய்து கொடுமைப்படுத்தியதும் இதே காங்கிரஸ் ஆட்சிதான்.

இன்று இலங்கையில் போர் நிறுத்தம் கோரித் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் காலவரம்பற்ற உண்ணாநோன்பை மேற்கொண்டிருக்கிறார். அவர் எல்லா நலத்துடனும் நீடுழி வாழவேண்டும்.

தமிழகச் சட்டமன்றமும் தமிழக மக்களும் ஒருமித்து நடத்திய அனைத்து அறப் போராட்டங்களையும் கண்டு கொள்ளாது, சிங்களப் பேரினவாத அரசுக்குப் படை, கருவி, நிதி முதலியவற்றை வழங்கியது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசுதான்.

இது குறித்துத் தமிழக அரசு மேற்கொண்ட செயல்பாடுகள் அனைத்தும், நடுவணரசின் தமிழின விரோத நடவடிக்கைகளுக்கு உதவுவதாகவே முடிந்தன.

இந்திய அரசே தமிழகத்தில் நிகழ்ந்த உயிர்த் தியாகங்களைப் பொருட்படுத்தாத போது, ராஜபக்சே அளவிலான சிங்கள பாசிச அரசு, கலைஞரின் உண்ணாநோன்புப் போராட்டத்தை ஏற்று நியாயம் வழங்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

கலைஞர் அவர்களின் இந்தப் போராட்டத்தின் பயனாக, முன்பு கலைஞர் அவர்களே முன்வைத்த இலங்கை அரசுடனான அரசியல் (ராஜீய) உறவைத் துண்டிக்கவேண்டும் என்ற கோரிக்கையையாவது இந்திய அரசு நிறைவேற்றுமா?

கலைஞர் அவர்களின் இந்தப் போராட்டம் தமிழகத்தில் மூண்டெரியும் சிங்களப் பேரினவாத எதிர்ப்பையும், இந்திய அரசின் துரோகத்துக்கு எதிரான தமிழ் உரிமை உணர்வையும் மடை மாற்றத் தான் பயன்படும்.

இன்று கலைஞர் செய்ய வேண்டியது தேர்தலைப் பற்றிக் கவலைப்படாது காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறுவது தான்.

மனிதன், தமிழன், படைப்பாளி என்றவகையில் இந்தக் கொடுமைகளுக்கு எதிராகச் செயற்பட வேண்டிய கடமை எனக்கும் இருக்கிறது.

இந்த வகையில் 2006 ஆம் ஆண்டு, தமிழக அரசின் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் வழங்கப்பட்ட 'கலைமாமணி' விருது, எனக்குக் கௌரவமாக அல்லாமல் முள்ளாகக் குத்திக் கொண்டிருக்கிறது. இதைத் தமிழக அரசிடமே திருப்பித் தருவதுதான் எனது மனித கௌரவத்தைத் தக்க வைத்துக் கொள்வதாக அமையும்.

தமிழக இளைஞர்கள் நிகழ்த்திய உயிர்த்தியாகங்களுடன் ஒப்பிடும்போது இது நிரம்பச் சாதாரணமானது.

அதனால் இம்மடலுடன் எனக்கு அளிக்கப்பட்ட 'கலைமாமணி' விருதுக்கான தங்கப்பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றைத் தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றச் செயலாளர் அவர்களுக்குப் திருப்பி அனுப்புகிறேன் என்று கூறியுள்ளார் இன்குலாப்.

Friday, April 20, 2007

என் பெயர் - மருதாயி - இன்குலாப்

என் பெயர் - மருதாயி - இன்குலாப் -


ஆன்ற தமிழ்ச் சான்றோரே!
தொல்காப்பியம்
பத்துப்பாட்டு
எட்டுத்தொகை
சிலப்பதிகாரம்
மணிமேகலை
சீவக சிந்தாமணி
வளையாபதி
குண்டலகேசி
கம்ப இராமாயணம்
பொ¢யபுராணம்
மறந்து விட்டேன் -
திருக்குறள்

எல்லாவற்றிலும் சுட்டப்பட்டவள் நான்
தாய்மொழி - தமிழ்
பெயர் - மருதாயி
தொழில் - பரத்தை

என்னைக் கடைமகள் எனலாம்..
மதுரையைக் கொளுத்திய
கற்பரசியே -
தலையாய கற்பினள் அல்லள்!

உங்கள்
மூத்த தமிழ் அளவுகோலில்..
கற்புத் தோன்றிய அன்றைக்கே
நானும் தோன்றிவிட்டேன் !

அய்யா
ஆன்ற தமிழ்ச் சான்றோரே!
என்னிடம் முதலில் வந்தவன்
உங்கள் கொள்ளுப் பாட்டன்..
இப்பொழுது
வந்து போனவன்
கொள்ளுப் பேரன்!

என்றாலும்
பாட்டன் எதிர்பார்த்தான் பாட்டியிடம்
"பெய்யெனப் பெய்ய"
தன் சடலம் எ¡¢யும் போது
உடன்வேக..
பாட்டி ஒருபோதும்
பாட்டனிடம் கேட்கவில்லை
"பெய்யெனச் சொல்லுக
உடன் வேக"

இருக்கையில் சில சமயங்களிலும்
போகையில் சில சமயங்களிலும்
பாட்டி
தன் தங்கையைத் தாரமாக்குவாள்

இல்லாவிடினும் இவன் மேய்வான்..
பத்தினியைப் பறிகொடுத்த
பாட்டனுக்கு
மச்சினியைக் கைப்பிடித்த
ஆறுதல்..

இல்லத்தரசி இருக்க என்னிடம் வந்தவனுக்கும்
மனைவி இருக்க மச்சினியைப் பிடித்தவனுக்கும்
ஒரு கீறலும் இல்லை கற்பில்..

தமிழ்க் குடும்பம் புனிதமானது!
தமிழ்ச் சமூகம் காலகாலமாய்க்
கற்புடையது.!

விரும்பியவனைச் சேர்வது
கற்பாகாது.
கட்டியவனை ஒப்புவதுதான்
கற்பாகும்..

கட்டியவன் முகமன்றி
வேறு முகம் கூடாது
காண.
கட்டியவன் நிழலன்றி
வேறு நிழலில்லை
பட.

அய்யா! அன்றதமிழ்ச் சான்றோரே!
கற்பரசி நினையாவிடினும்
கண்டவன் அவளை நினைத்தால்
அவள் கற்புக்கரசி ஆகமாட்டாள்..
கற்புடைப் பெண்டிர் பிறர் நெஞ்சு புகார்..

தமிழ்நாட்டுக் குரங்கும் மீனும்
கற்புடையவைதாம்.

கைம்மை உய்யாக் காமர் மந்தி
ஓங்குமலை அடுக்கத்துப்
பாய்ந்து
உயிர் செகுக்கும்.

தன்கணவன்மீன் அல்லாத
வேறு ஆண்மீனைத் தொடநேர்ந்த
மனைவிமீனை
வெட்கம் பிடுங்கித் தின்னும்..
தற்கொலை செய்ததோ
என்னவோ
தண்ணீ¡¢ல்..

உடன் கட்டை ஏறிய
பத்தினிப் பெண்ணைப்
பாராட்டாத
தமிழ் எழுத்தில்லை.
பொ¢யார் எழுத்தைத் தவிர.

பாவாடையும் சேலையுந்தான்
தமிழ்ப் பண்பாடு..
சு¡¢தாரும் பேண்டும்
கவர்ச்சிக் கண்றாவி!
மொபட் ஓட்ட பேண்டுதான் வசதியா?
மொபட் ஓட்டாதே..
படைநடை பயிலாதே..
தமிழ்ப் பெண் அடக்கமானவள்..
ஆறடிக் கூந்தல் இன்னுமோர்
அடையாளம்.

கூந்தல்வார நேரமில்லையா?
மூக்கடைப்பு நோய்த் தொலலையா?

கூந்தலைக் குறைக்காதே
தமிழ் குறைந்து போய்விடும்!

ஒருவனுக்கு உண்மையாய்
இருப்பதே தமிழ்க் கற்பு..
அவன் கல்லானாலும் மண்ணானாலும்
கட்டியவள் ஏற்கெனவே கன்னிதானா
என்று எதிர்பார்ப்பதே
தமிழ் மரபு நியாயம்..
தமிழர் அனைவரும் உறுதி கொள்ளலாம்.

இங்கிலாந்து நடத்திய
கன்னிமைச் சோதனையை
இல்லறம் தொடங்குவோன்..
நடத்திப் பார்க்கலாம்
தேறினால் மட்டுந்தான்
பண்பாடு தேறும்..
தமிழ்க் குடும்பம் புனிதமானது..

அய்யா ஆன்றதமிழ்ச் சான்றோரே!
உங்கள் பண்பாட்டை நீங்கள் பிடித்த
காலகாலமாய் நானும் நடக்கிறேன்
கற்புத் தோன்றிய அன்றைக்கே
நானும் தோன்றிவிட்டேன் -
தாய்மொழி - தமிழ்
பெயர் - மருதாயி
தொழில் - பரத்தை !

நன்றி : சிந்தனையாளன் - பொங்கல் சிறப்பு மலர் 2006

தற்கால இலக்கியம்.."உண்மையைச் சொல்ல நான் அஞ்சியதில்லை!'- கவிஞர் இன்குலாப்

தற்கால இலக்கியம்.."உண்மையைச் சொல்ல நான் அஞ்சியதில்லை!'

- கவிஞர் இன்குலாப்

இன்குலாப் என்றால் புரட்சி என்று பொருள். புரட்சிகர சிந்தனையை வாழ்க்கையாகவே வரித்துக்கொண்ட இவர், பெயரையே இன்குலாப் எனப் புனைந்து கொண்டார். இயற்பெயர் சாகுல் அமீது. ராமநாதபுரம், கீழக்கரையில் இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர். பிறந்த குடும்பத்தி லிருந்தே பாட்டுக்கட்டும் திறனையும், எதிர்ப்புக் குரலையும் ஈர்த்துக் கொண்ட இவரின் முதல் கவிதை முயற்சி 12 வயதில் நிகழ்ந்தது.
தர்க்காவில் 'பேய் ஓட்டுகிறேன்' என்று பெண்களைக் குச்சியால் அடித்துத் துன்புறுத்தியதைக் கண்டு பொறுக்க முடியாத கணத்தில் முதல் கவிதை கனன்று வெளிப்பட்டது. அது முதல் இன்றுவரை தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்.
சாதி, மதம், இனம், மொழி, வர்க்கம் என சகல தளங்களிலும் நிகழும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக இவரது குரல் உரத்து ஒலிக்கிறது.
இவரது கவிதைகள் 'ஒவ்வொரு புல்லாய்' எனும் தொகுதியாகவும், கட்டுரைகள் 'ஆனால்' எனும் நூலாகவும், நாடகங்கள் 'குறிஞ்சிப்பாட்டு', 'குரல்கள்' எனும் தொகுதி களாகவும், கதைகளும் குறுநாவலும் 'பாலையில் ஒரு சுனை' எனும் நூலாகவும் வெளிவந்துள்ளன. 'பொன்னிக்குருவி' 'புலி நகச் சுவடுகள்' எனும் கவிதை நூல்களும், 'மணிமேகலை' நாடக நூலும் தயாராகி வருகின்றன.
இவரது எழுத்துகளுக்காகக் கிடைத்தது விருதுகளோ பரிசுகளோ அல்ல; அச்சுறுத்தல்களும், நள்ளிரவுக் கைதுகளும் தான். இவரும் தனது படைப்புகளுக்காக எதிர்பார்த்திருப்பது விருது களையோ, பரிசுகளையோ அல்ல; சமூக மாற்றத்தைத்தான்.

இதோ சமரசம் செய்துகொள்ளாத இவருடன் ஒரு சந்திப்பு.

ஒரு படைப்பாளியின் கடமை என்ன?

இலக்கியம் என்பது ஒரு கலை. அதனால், கலைத் தரத்தில் மேம்பட்டதாக இலக்கியம் இருக்கவேண்டும். பொறுப்புணர்வுடன் செய்கிற இலக்கியங்கள்தான் சமூகத்துக்கு அதனுடைய இலக்கியச் சுவை உணர்வை வளர்ப்பதிலும் மனித உணர்வுகளை மேம்படுத்து வதிலும் உதவும். ஒரு கலையின் மூலம் கலைஞன் சுய அனுபவங்களை மட்டுமல்ல, சமூக அனுபவங் களையும் சொல்லிச் செல்கிறான். அவ்விதம் சொல்வதே அவன் கடமை.

40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிக் கொண்டிருக் கிறீர்கள். பல்வேறு காட்சி மாற்றங்களைக் கண்டிருக் கிறீர்கள். இன்றைய இலக்கியத் தன்மையின் முகம் மாறியிருக்கிறது. இந்த மாற்றம் குறித்து....

வரவேற்கத்தக்க போக்காகத்தான் உணர்கிறேன். தீவிரமான படைப்பு முயற்சி இளைஞர்களால் முன்வைக்கப் படுகிறது. இது ஏற்கெனவே எழுதிக்கொண்டிருக்கிறவர்களையும் இன்னும் புதிய விஷயங்களைச் சொல்லத் தூண்டுகிறது. புதிய விஷயங்களை ஏற்குமாறு அறைகூவல் விடுக்கிறது. எனினும், சமூகப் பொறுப்புணர்வு இல்லாமல், தோன்றுவதை எழுதுகிற போக்கும் காணப்படுகிறது. இது கால ஓட்டத்தில் என்ன கதியைப் பெறும் என்பதை இப்போது என்னால் சொல்லமுடியாது.தலித்தியம், பெண்ணியம் சார்ந்த படைப்புகள் இப்போது ஏராளமாக வருகின்றன. இந்தப் படைப்பு கள் பெரும்பாலும் சுயஅனுபவம் சார்ந்தே உள்ளன. இதனால் பல புதிய திறப்புகள் தமிழ் இலக்கியத் துக்குக் கிடைத்துள்ளன.

எனினும், ஒரு நேர்த்தியான படைப்பு என்கிற வகையில் எந்த அளவில் இவை நம்பிக்கையளிக்கும் வகையில் உள்ளன?

சுய அனுபவம் சார்ந்து வரக்கூடிய ஒரு படைப்பு என்பது ஒரு சமூக வாழ்வனுபவத்தைத் திறந்துவிடக் கூடிய திறவுகோல்தான். ஆனால், சுயஅனுபவம் என்கிற சித்திரிப்பு உண்மையாக இருத்தல் வேண்டும். தலித்தியம், பெண்ணியம் சார்ந்த படைப்புகள் ஒரு நீண்ட பிரசவவலிக்குப் பிறகு முகம் காட்டி இருக்கின்றன. அதற்கான ஒத்திகைகளும் நடந்து கொண்டிருந்தன என்றுதான் சொல்லவேண்டும். தலித்திய, பெண்ணியப் படைப்பாளிகள் ஒரு குறித்த நோக்கோடு எழுதுகிறார்கள் என்றுதான் கருதுகிறேன். வெறும் ரசனைக்காக அவர்கள் செய்யவில்லை. அவை விடுதலைக்கான முன்மொழிவுகள். இந்தப் படைப்புகள் அனைத்தையும் நான் படித்தேன் என்று சொல்ல முடியாது. படித்த மட்டும் நான் நம்பிக்கை கொள்கிறேன். இன்று சமூக மாற்றத்துக்கான காத்திரமான படைப்புகளை தலித்திய, பெண்ணிய எழுத்தாளர்கள் தான் முதன்மையாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதே பெண்ணிய, தலித்திய எழுத்தாளர் பலர் 'தூய' இலக்கியவாதிகளின் அநுக்கிரகத்தைப் பெறுவதுதான் ஒரு பேறு என்று கருதும் போக்கும் சிலரிடம் காணப்படுகிறது. புரட்சிகர மாற்றத்தை விரும்பாத 'தூய' இலக்கியவாதிகள் இத்தகைய படைப்புகளை ஆபத்தற்றதாகக் கருதுகிறார்கள். எனவே, இந்த வட்டத்தின் வரவேற்புகளுக்கு அப்பால், வெகுமக்களை நோக்கி விளிக்கக்கூடியதாக அவர் களுடைய படைப்புகள் செல்லவேண்டும். ஒரு படைப்பாளி ஓர் உண்மையின் தீவிரத்தால் படைப்பை உருவாக்க முயலும்போது மதவாதக் கோடுகளை பொருட்படுத்தவில்லை அல்லது அதனை எதிர்க்கும் கட்டாயத்துக்கு உள்ளாகிறார். இது இன்று வரக் கூடிய பெண்ணியப் படைப்பாளிகளுக்கு நேர்ந்தது என்று கூறுவதற்கு முன்னால் எனக்குக் கூடுதலாக நேர்ந்த அனுபவம். என் அனுபவத்தில் உண்மையைச் சொல்ல நான் அஞ்சியதில்லை. விளைவுகளைக் கண்டு பின்வாங்கியதில்லை.ஒடுக்கப்பட்ட சமூகம் விழிப்புணர்வு பெறுகிறபோது விடுதலை உணர்வோடும் எதிர்ப்புக் குரலோடும் கனன்று கொண்டிருக்கும். அவ்வுணர்வுகள் படைப்பாக்கப்படும் போது அதற்கேயுரிய இயல்புத் தன்மையோடு தவிர்க்க முடியாமல் வசவுச் சொற்களாகவும் வந்து விழும்.

அந்த உக்கிரத்தை உங்களின் 'மனுசங்கடா' பாடலில் இடம் பெற்றுள்ள வரியில் உணரமுடிந்தது. தமிழ்ச் சூழலில் அந்தப் பாடல் ஏற்படுத்திய தாக்கம் அதிகம். அதே வேளை, வசவுச் சொற்களே தலித் இலக்கியம் என்பதான எண்ணம் இளம் தலித் படைப்பாளிகள் சிலரிடம் ஏற்பட்டிருக்கிறதே...?

'மனுசங்கடா' என்கிற என் பாடலில் நான் பயன் படுத்தியது போன்ற சொற்களைச் சொல்லவேண்டும் என்கிற நோக்கத்தில் எந்தப் படைப்பையும் செய்யக் கூடாது. படைப்பு முயற்சிக்கு ஒரு தர்க்கம் இருக்கிறது. அது வெளிப்பாட்டில் புலப்பட்டே தீரும். அத்தகைய ஒரு புலப்பாடு வசவுச் சொற்களைக் கொண்டு இயங்கு மாயின், அது தவறாகாது என்று நான் கருதுகிறேன்.

சில பெண்ணியக் கவிஞர்கள் பாலுறுப்புகள் சார்ந்த சொல்லாடல்களையும், பாலியல் அனுபவங்களையும் முன் வைக்கின்றனர். இத்தகைய படைப்புகள் புதிய அதிர்வுகளை உண்டாக்கி வருகின்றன. அந்தக் கவிதை களை எவ்விதம் அணுகுவது?

பாலுறுப்புகள் சார்ந்த சில சொல்லாடல்கள் தொல்தமிழ் இலக்கிய மரபுக்கு புதியதன்று. சில சொற்கள் மிக இயல்பாக பழம் இலக்கியங்களில் கையாளப்பட்டு வந்திருக்கின்றன. திருக்குறளுக்கு முன்பு இத்தகைய சொல்லாடல்கள் என்பது இயல்பாக வந்திருக்கிறது. திருக்குறள் ஒரு அறநூல். அது அறத்தை வலியுறுத்தும்போது இந்தச் சொற்களைத் தவிர்க்க முயல்கிறது. திருக்குறளுக்கு முந்தைய தொன்மை இலக்கியங்களில் கண், மூக்கு என்பன போன்ற உறுப்பு களின் சாதாரணத் தன்மைதான் இந்தப் பாலியல் உறுப்புகளுக்கும் தரப்பட்டிருக்கிறது. சில இடங்களில் அவற்றிற்கு ஒரு காமக்குறிப்பு தரப்பட்டிருக்கலாம். இன்று இந்த உறுப்புகளை ஆண் கவிஞர்கள் சுட்டும் போது, படிக்கும் ஆண் கவிமனம் பாராட்டுகிறது. ஆனால், இதே சொல்லை பெண் கவிஞர்கள் படைக்கும் போதுதான் அதிர்ச்சியுறுகிறது. இது திருக்குறள் காலம் தொடங்கி பெண்ணை சிறை காக்க முயன்ற கருத்தியல் தளத்தின் அதிகாரத்தைத்தான் நமக்கு உணர்த்துகிறது. அதிகாரம் உடைபடும் இத் தருணத்தில் தன் உறுப்பு பற்றிய பிரக்ஞையோடு பெண்கள் பேசத் தொடங்குகிறார்கள். படிக்கிறவர்கள் இந்த வார்த்தைகளில் உறைந்துபோய்விடாமல், வார்த்தைகளுக்கு அப்பால் அந்தப் படைப்பு உணர்த் தும் செய்தி என்ன என்பதை மனம் கொள்ள வேண்டும்.

சமீப காலமாக நாடகத் துறையில் அதிக கவனம் செலுத்துகிறீர்கள். அதற்கான தேவை, முயற்சிகள் பற்றி...?

ஒரு படைப்பாளி தனக்குச் சாத்தியமான அனைத்து தளங்களிலும் முயலவேண்டும். கவிதை, கதை, இவற்றை ஒரு தூயநிலைக்குக் கொண்டு செல்பவன் அல்லன் நான். போராட்டத்திற்காக எடுத்துச் செல்பவன். அந்த வகையில் நான் பிறந்த தமிழினத்தின் தொன்மை வரலாற்றை அதனுடைய பண்பாட்டுப் படிவங்களாக்கி இலக்கியத்தில் பார்க்கிறேன். அவை எனக்கு அந்த சமூகங்கள் போராடிய செய்தியை உணர்த்துகின்றன. இந்த அனுபவங்களை எழுத்தில் கோடு காட்டலாம். ஆனால், நாடகத்தில் காட்சிப்படுத்தி இயங்க வைக்கமுடியும். அதனால் நாடகத்தையும் கையிலெடுத்திருக்கிறேன்.

உங்கள் எழுத்துகள் எந்த அளவு சமூகத்தைப் பாதித் திருப்பதாக நினைக்கிறீர்கள்?

சமூகம் ஒரு மனிதநேயத்துடன் மாறுவதற்கான இயக்கத்தில் இருக்கிறது. அதில் எத்தனையோ கருவிகள் அந்த இயக்கத்துக்கு உதவி இருக்கலாம். அதில் ஒரு சிறு துரும்பாக என் எழுத்தும் இருக்கும் என்று நம்புகிறேன்.

Friday, March 9, 2007

எழுதமாட்டேன்

எழுதமாட்டேன்

எழுதமாட்டேன்
ஒருவரி கூட
நீ
ஒப்பும்படி

எழுத்திலும் அதிரும்
என் பறையொலி
நாராசமாய்
உன்
செவியில் இறங்குதல் போல்

உன்
மெளனவரியும்
அருவருக்க ஊரும்
என்
கண்ணிலூம் மனசிலும்
ஒரு
கம்பளிப் புழுவாய்

என்
கவிதை முளைவிடும்
மனுசங்க வெளியை
உன்
கால்விரல் நகமும்
தீண்டாதது போலவே

மேட்டிமைத் திமிரும்
உன்
சபை வாசலில் கூட
நீளவே நீளாது
என் மயிரின்
நிழலும்